

விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 68). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான ஜாமான்களை வாங்கி கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது திருக்கனூரிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக விக்கிர வாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.