பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே மொபட் மீது கார் மோதி ‌‌தொழிலாளி பலி

பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற மொபட் மீது கார் மோதி ‌‌தொழிலாளி பலியானார்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58). கூலித்தொழிலாளி. இவருடைய உறவினர் சண்முகம் (58). இவர்கள் 2 பேரும் மொபட்டில் நேற்று வடகரையாத்தூரில் இருந்து பரமத்திவேலூர் வந்துள்ளனர். பின்னர் கரூர் செல்வதற்காக பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற சண்முகம், பின்னால் அமர்ந்து சென்ற துரைசாமி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். 

அவர்கள் இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துரைசாமி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த சண்முகம் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் துரைசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com