சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பள்ளிப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
கூட்டத்தில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணை தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு விகிதம் குறித்து தீர்மானம் படிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பதிவேட்டில் கையெழுத்தும் போட வில்லை.

வெளியே வந்த அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடிந்து விட்டது. எந்த விவாதமும் நடக்க வில்லை. கூட்டத்தில் கமிஷனர் கோபிநாத், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com