தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ் புத்தாண்டையொட்டி வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வரு கிறது. 

ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். 

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.200க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.250க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.3க்கும் விற்பனையானது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.3 க்கும் விற்பனையானது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com