

குமாரபாளையம் :
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் நில அளவியல் துறை அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் சங்கீதா (வயது38).
இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வேலை முடிந்து சங்ககிரியில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார்.
சேலம் கோவை நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஓடி வந்ததால், அவர் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் சங்கீதா பலத்த காயமடைந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.