

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள் வருகிற 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் தங்களது வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிதி உதவி நிறுத்தப்பட்டுவிடும் .
அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் வராது. பரமத்தி வட்டார விவசாயிகள் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் பரமத்தி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் பொது சேவை மைய முகவர்களால் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெறுகிறது.
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து பயன் பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு நாளை(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் கபிலர்மலை சமுதாய கூடத்தில் பொது சேவை மைய முகவர்களால் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெறுகிறது.
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து பயன் பெறுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.