

பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
சிப்ஸ் இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு
ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஜவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.6 ஆயிரத்து 500& க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ. 8 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர்.
ஒரு டன் ரூ.9,500 தற்பொழுது ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளுக்கு மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,500 வரை உயர்வடைந்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.9,500 &க்கு வாங்கி செல்கின்றனர். மரவள்ளிகிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.