வெங்கரை பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

வெங்கரை பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
வெங்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
வெங்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் வெங்கரை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் தலைமையிலான போலீசார் கொண்ட குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களையும் ஓரமாக நிறுத்தி ஒவ்வொரு வாகனங்களிலும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்கிறார்களா என தீவிர சோதனை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com