நாமக்கல்லில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

சொத்துவரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் நீதிமயத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மக்கள் நீதிமயத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

நாமக்கல்:

பெட்ரோல்  டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள்நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளன. இதனால் ஏழை எளிய பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளர். 

இதே போல சமையல் கேஸ் விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளன. 150 சதவீதம் சொத்து வரி உயர்வால் வீட்டு வாடகை, வணிக நிறுவனங்களின் கடை வாடகை உயர்த்தப்பட்டுள்ளன. 

எனவே பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

X

Maalai Malar
www.maalaimalar.com