பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கபிலர்மலையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
கபிலர்மலையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கூட்ட அரங்கில் பாரத பிரதமரின் பயிர்  காப்பீட்டு திட்டம் பாடசாலை காணொளி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்தார்.முகாமில் அட்மா தலைவர் தன்ராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை கொடுப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.

கபிலர்மலை பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கபிலர்மலை சமுதாயக் கூடத்தில் பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட பாடசாலை காணொளி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

முகாமில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான  நிதி உதவி  திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com