நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவரம் தெரிவித்து உள்ளது.

இன்று 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். 

இன்றும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 5-ந் தேதி ஆகிய 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்தும், நாளை தெற்கு திசையில் இருந்தும் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. 

எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். இதனிடையே கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். மேலும் தீவனத்தில் வைட்டமின் சி, நுண்ணூட்ட கலவைகளை பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com