தனியார் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

பரமத்தி வேலூர் தனியார் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயற்பியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் செல்வராசு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேகர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே கல்லூரியில் பயின்ற இயற்பியல் துறை மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் சர்.சி.வி.இராமன் அறக்கட்டளை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை துவங்கப்பட்டது.

மேலும் முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இயற்பியல் துறை ‌‌‌இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

விழாவில் கல்லூரியின் தலைவர் டாக்டர் சோமசுந்தரம், கல்லூரி முதல்வர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

முடிவில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com