நடந்து சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

பரமத்திவேலூர் அருகே நடந்து சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே மரவாபாளையம் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் மரவாபாளையத்திலிருந்து பரமத்திவேலூர் நோக்கி நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.

இரு சக்கர மோட்டார் வாகனம் விற்பனை செய்யும் கடை அருகே சென்ற–போது பரமத்தி–வேலூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (37 )என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் குமரன் மீது மோதியது. இதில் குமரன் நிலைதடுமாறி தார்சாலையில் கீழே விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார் .இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com