

சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 4-வது கிராஸ் பகுதி சேர்ந்த வர் பெருமாள். மனைவி பொன்னுத்தாயி (வயது 95). இவருக்கு 7 மகன்கள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் பொன்னுத்தாயி தனது 6-வது மகன் ஆனந்தனுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தன் மற்றும் அவரது மனைவி பரிமளா ஆகியோர் வெளியே சென்று இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 47) என்பவர் வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாயை தாக்கி அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
அப்போது பொண்ணு தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை விரட்டிச் சென்று பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.