பெண் தூக்கு போட்டு தற்கொலை

மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தூக்கு போட்டு தற்கொலை
Published on

மதுரை

மதுரை தல்லாகுளம், கலைநகர் சாமுவேல் மனைவி ஷீலா சரண்யா (வயது 27). இவருக்கும் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷீலா சரண்யா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி ஷீலா சரண்யாவின் தாய் அன்னம்மாள் ஜெயராணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதில், "எனது மகள் ஷீலா சரண்யாவுக்கு, அவரது கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்தனர். இதன் காரணமாகவே எனது மகள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார். இதன் அடிப்படையில் தலாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com