

மதுரை
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாவட்ட கலெக் டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்து வது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயன் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தி னர்.
பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது-
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளோம் உள் ளாட்சி தேர்தலில் கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்திலும் இன்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது. இதற்காக 16 இடங்களில் வேட்பு மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் காணிப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்புமனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அப் ரசியல் கட்சிகளுக்கு விளக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 13 லட்சத்து 39 ஆயிரத்து 452 வாக்காளர்களும், மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 73 ஆயிரத்து 289 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டி யல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப் பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.மேலும் 200 வாக்குச்சாவடி மையங்கள் மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு மையத்தில் 18004257861 என்ற இலவச டோல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சம்பந்தப்பட்ட புகார் களுக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சியை பொருத்தவரை பதி வான வாக்குகள் அனைத் தும் 4 இடங்களில் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டலம் 1&க்குட்பட்ட வார்டுகளுக்கான வாக்கு கள் எண்ணிக்கை பாத்திமா கல்லூரியில் நடக்கிறது.
மண்டலம் 2 க் குட்பட்ட வார்டுகளில் பதிவாகும் வாக்குகள் வக்பு வாரிய கல்லூரியிலும், மண்டலம் 3 உட்பட்ட வார்டுகளில் பதிவாகும் வாக்குகள் தமிழ்நாடு பாலி டெக்னிக் (பெண்கள்) கல்லூரியிலும், மண்டலம் 4 உட்பட்ட வார்டுகளில் பதிவாகும் வாக்குகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் (ஆண்கள்) கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.