பீரோ விழுந்து சிறுவன் பரிதாப சாவு

பீரோ விழுந்து சிறுவன் பரிதாப சாவடைந்தார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீரோ விழுந்து சிறுவன் பரிதாப சாவு
Published on

மதுரை

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் கிருத்திக் வீரபத்திரன்(வயது2). இவன் சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மர பீரோ எதிர்பாராத விதமாக சிறுவன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த கிருத்திக் வீரபத்திரனை குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கிருஷ்ணன்(வயது25). இவர் மதுரை கீரைத்துறையில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றிருந்த கிருஷ்ணன் அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மேல் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி தொட்டிக்குள் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com