தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

மதுரையில் குருத்தோலை ஞாயிறு தினமான இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குருத்தோலை பவனி.
குருத்தோலை பவனி.
Published on

மதுரை

தமிழகம் முழுவதும் மார்ச் 2ந்தேதி (சாம்பல் புதன்) முதல் வருகிற 17ந்தேதி (ஈஸ்டர்) வரை கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். 

இதையொட்டி குருத்தோலை ஞாயிறு இன்று தொடங்கியது. மதுரையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் தெருக்களில் ஊர்வலமாக வந்து தேவாலயங்களுக்கு சென்றனர். அங்கு சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

மதுரையில் குருத்தோலை ஞாயிறு பவனியை முன்னிட்டு நரிமேடு கதீட்ரல் சி.எஸ்.ஐ. சர்ச், ஞானஒளிபுரம் புனித வளனார் தேவாலயம்  உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக வந்திருந்து வழிபாடு நடத்தினர். 

இதன் தொடர்ச்சியாக புனித வியாழன் அன்று தேவாலயங்களில் 12 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு, அவர்களது பாதங்களை பாதிரியார் கழுவி முத்தமிடும் நிகழ்வு நடக்கிறது. புனித வெள்ளி அன்று மாலை தேவாலயத்தில் ஆராதனை, சிலுவைப்பாதை மற்றும் ஜெப வழிபாடு நடத்தப்படும். அதன்பிறகு சனிக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் ஆராத-னையும் திருப்பலியும் நடக்கும்.

இயேசு பெருமான் உயிர்த்தெழும் நிகழ்வான ஈஸ்டர் பண்டிகையுடன்  கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும் என்பது  குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com