விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி

அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் ஆனந்த்.
டிரைவர் ஆனந்த்.
Published on

அலங்காநல்லூர்

மதுரை அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது42). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால்வண்டியும், அவரது இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com