வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது

வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது
Published on

மதுரை

மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 46). இவர் தெற்கு தெருவில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கோவில் திருவிழாவுக்கு கணக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மாலை மகேஷ்குமார் கடையில் இருந்தார். அங்கு வந்த 2பேர் அவரை தாக்கிவிட்டு தப்பினர்.

இது தொடர்பாக மகேஷ்குமார் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிச்சியம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(42), அவரது மகன் ஹரி ரஞ்சித்(23) ஆகியோரை கைது செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் இருதய நகரை சேர்ந்தவர் வாசு தேவன்(72). இவரது மகன் மாரிராஜா. இருவருக்கும் இடையே அனுமதியின்றி சகோதரியை திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று இரவு வாசுதேவன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாரிராஜா தந்தை என்றும் பாராமல் வாசுதேவனை தாக்கி விட்டு தப்பினார். இது தொடர்பாக வாசுதேவன், ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி ராஜாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com