கூலி தொழிலாளியை தாக்கிய தி.மு.க நிர்வாகியின் மகன் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய தி.மு.க நிர்வாகியின் மகன் கைது செய்யப்பட்டார். வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார்.
கூலி தொழிலாளியை தாக்கிய தி.மு.க நிர்வாகியின் மகன் கைது
Published on

மதுரை

மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கூலிதொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் சேகர் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்தது.

இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீஸ் நிலை யத்தில் வழக்கு உள்ளது.

நேற்று மாலை மணிகண்டன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த விஜய் சேகர் குடும்பத்தினர் அவரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த விஜயபாபுவை (37) கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக இவரது தந்தை விஜய சேகர் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணி கண்டனை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com