கோலம் போடுவதில் தகராறு; பெண் மீது தாக்குதல்

கோலம் போடுவதில் தகராறில் பெண்ணை தாக்கியுள்ளனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
கோலம் போடுவதில் தகராறு; பெண் மீது தாக்குதல்
Published on

மதுரை

அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரவீந்திரநாத் மனைவி பாக்கியலட்சுமி (54). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜா மனைவி ருத்ரவல்லி (40) எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் பாக்கியலட்சுமி தாக்கப்பட்டார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ரவள்ளி, அவரது சகோதரர் வன்னிமுத்து சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே வழக்கில் ருத்ரவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி, அவரது சகோதரி சத்யா, வேலைக்காரர், கார் டிரைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com