மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பரிதாப சாவு

டி‌. கல்லுப்பட்டி அருகே மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். திடீரென மழை பெய்ததால் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினார்.
மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பரிதாப சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. கல்லுப்பட்டி போலீஸ் சரக்கத்திற்கு ட்பட்ட எம்.சுப்புலாபுரம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த் (வயது 23). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்தது.

உடனே அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் பிரசாந்த் மழைக்கு ஒதுங்கினார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக முறிந்து கீழே நின்றிருந்த பிரசாந்த் மீது விழுந்தது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அப்ப குதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com