வக்கீலுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீலுக்கு அரசு ஊழியர் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு ஆர்டர்
மதுரை ஐகோர்ட்டு ஆர்டர்
Published on

மதுரை

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் குமாரவேல். பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் இவருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013-&ல் உத்தரவிடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை 3 மாதமாக குறைக்கக் கோரி குமாரவேல், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாக கூறியுள்ளார். 

“லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரரின் இந்தச் செயலைக் கடுமையாக அணுக வேண்டும். 

கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிற 19&ந்தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. 

ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்‘’ என நீதிபதி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com