பாலத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி

உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.
பாலத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் கபிலர்மலையில் இருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com