ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
நல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

விழாவை யொட்டி நல்லூர் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பாபநாசம் ஸ்ரீகலைக்கோயில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் இணைந்து ராதே, கிருஷ்ணன் வேடமணிந்து பங்கேற்ற கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து உறியடி உற்சவமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நல்லூர் ராஜா பாடசாலை நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com