சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர்.
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கார்த்திக்(வயது 22). கல் அறுக்கும் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர். இதை தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com