பைக் மோதி ஒருவர் பலி

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பைக் மோதி ஒருவர் பலியானார்
பைக் மோதி ஒருவர் பலி
Published on

கரூர்:

கரூர் நொய்யல் அருகே நாடார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல்மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஊட்டி உமர் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய நாதன்(45) சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆரோக்கிய நாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பா ளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com