நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி முதியவர் பலி

நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவுசி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி முதியவர் பலி
Published on

நாகர்கோவில்:

சுசீந்திரம் ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை (வயது 75). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்தார். கோட்டாறு கம்பளம் பகுதியில் சுந்தரம் பிள்ளை நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அரசு அவர் மீது மோதியது.

இதில் சுந்தரம் பிள்ளை படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுந்தரம் பிள்ளை இறந்தார்.இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுந்தரம்பிள்ளை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com