வெள்ளமடம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி

ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார்கல்லூரி வாகனத்தை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை
வெள்ளமடம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி
Published on

கன்னியாகுமரி:

வெள்ளமடம் அருகே உள்ள கரையான் குழி பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 85). தற்போது திருப்பதிசாரம் பகுதியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்று வந்த போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான வாகனம் மோதியது மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தவமணியை அக்கம்பக்கத்தினர் ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

அங்கு சிகிட்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தவமணியின் உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி வாகனத்தை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com