அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
Published on

கன்னியாகுமரி:

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய அதிநவீன வாகனத்தில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாகனத்தில் இருந்த வ.உ. சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர்அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து நடந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த வர்கள் கலந்துகொண்ட னர். பேரணியில் கலந்து கொண்ட வர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா,ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com