சுசீந்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வாகனம் மோதி பலி

சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிமியோன் (வயது 46). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 4-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக சுசீந்திரம் புறவழி சாலையில் காக்குமூர் சந்திப்பில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிமியோனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனு மதித்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிமியோன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிமியோன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com