யூஜின்
யூஜின்

தக்கலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வங்கி ஊழியர் பலி

தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைபலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Published on

கன்னியாகுமரி:

வீயன்னூர் அருகே மஞ்சாடிவிளை பகுதியை சேர்ந்தவர் யூஜின் (வயது36).

இவர் திங்கள் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல பணியை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தக்கலை அருகே சாரோடு பகுதியில் வரும் போது யூஜின் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த இவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யூஜின் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக இவரது மனைவி பிச்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com