குலசேகரன்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நோன்பின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
இப்தார்பு நிகழ்ச்சி நினைவாக மரக்கன்று நட்ட போது எடுத்த படம்.
இப்தார்பு நிகழ்ச்சி நினைவாக மரக்கன்று நட்ட போது எடுத்த படம்.
Published on

உடன்குடி:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை தாங்கி நோன்பின் நன்மைகள், மகிமைகள், மற்றும் சமத்துவம், சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய செயல்பாடுகளுடன் ஒவ்வொரு மனிதனும் எப்படி செயல்பட வேண்டும், சகோதர தத்துவத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று பேசினார்.

ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகரத்தலைவர் ஆறுமுகராஜா, செயலாளர் மரிய இருதயராஜ், உடன்குடி ஒன்றிய ஆலோசகர் பேச்சுமுத்து, ஆத்தூர் கவுன்சிலர் கேசவன் மற்றும் திருமணி உட்பட பலன் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com