நாமக்கல்லில் கடும் பனிமூட்டம்

நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
நாமக்கல்லில் கடும் பனிமூட்டம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மிகுந்து காணப்பட்டது. அருகே இருப்பவர்கள் யார் என தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.

காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அன்றாட வேலைக்கு சென்றனர்.

நகரப் பகுதி கோடை வாசஸ்தலம் போல் காட்சியளித்த நிலையில், கடும் குளிரால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com