புதுக்கோட்டையில் ஆயுதங்களுடன் கைதான கும்பல்

பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அவர்கள் ஏதும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
புதுக்கோட்டையில் ஆயுதங்களுடன் கைதான கும்பல்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எஸ்.பி.வந்திதா பாண்டே மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் ஆயுதங்களுடன் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(26), மணிகண்டபிரபு(29), நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் பாண்டியன்(23), இசக்கி பாண்டியன்(24), ராஜவல்லிரம் மகாதேவன்(32) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஏதும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com