ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.
வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி 3-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கானகோப்பையை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள். போட்டியினை விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com