தச்சநல்லூரில் 'வாட்ஸ்-அப்'பில் குழு அமைத்து லாட்டரி விற்ற பைனான்சியர் கைது

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி . இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார்
தச்சநல்லூரில்  'வாட்ஸ்-அப்'பில் குழு அமைத்து  லாட்டரி விற்ற பைனான்சியர் கைது
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 35). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை சோதனை செய்தபோது அவர் குழு மூலமாக கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், செல்போன், ரூ.8 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com