உலக இசை தினம்-கலை விழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக இசை தினம்- கலை விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உலக இசை தினம்-கலை விழா
Published on

மதுரை

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் சார்பாக வருகின்ற 18-ந் தேதி அன்று மாலை 4.00 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் "தமிழ்நாடு நாள்" மற்றும் உலக இசை தினம்- கலை விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மதுரை அகில இந்திய வானொலி நிலைய குரலிசை கலைஞர் பாலாமணி ஈஸ்வர் டி.வி.ராமா னுஜாசாருலு ஆகியோ ரின் குரலிசை நிகழ்ச்சியும், மதுரை அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை இசை நிகழ்ச்சி, கலைமாமணி ஆத்தூர் கோமதி குழுவினர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com