நவ்வலடி சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளிக்கு மகளிர் இலவச பயண பஸ் சேவை நீட்டிப்பு

நவ்வலடியில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.மாணவர்களை ஏற்றிவந்த பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
 பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டிய காட்சி.
 பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டிய காட்சி.
Published on

திசையன்விளை:

நவ்வலடி தட்சணமாற நாடார் சங்க சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வசதிக்காக திசையன்விளை - கூடங்குளம் மகளிர் இலவச பயண பஸ்சை சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி வரை சிறப்பு அனுமதியுடன் நீடித்து தரவேண்டும் என நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ். போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று நவ்வலடியில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிவந்த பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் நல்வலடி சரவணகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com