குழந்தையுடன் பெண் மாயம்

இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
குழந்தையுடன் பெண் மாயம்
Published on

ஈரோடு:

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com