கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் சாவு

சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் சாவு
Published on

ஈரோடு:

கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் மாரநாயக்கர். இவரது மனைவி சரோஜா (56). இவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

இதனால் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் உள்ள அவரது அக்கா பாப்பாத்தி வீட்டில் சரோஜா தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com