சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலி

சத்தியமங்கலம் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலியானார்இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து மாகாளி சத்தியமங்கலம் அடுத்த வேலாங்காட்டு தோட்டத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவரை அவரது மகன் சரவணன் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாகாளி சமைத்துக் கொண்டிருந்த போது மாகாளி வேட்டியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com