ஈரோட்டில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று

சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோட்டில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 50 ஆக பதிவாகி வந்தது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 1 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 863 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கொரோனா தினசரி பரிசோதனை 450 வரை எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து தற்போது 800 பேருக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com