கோவையில் என்ஜினீயரிங் மாணவர் திடீர் சாவு

ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.விடுதியில் இருந்த போது திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார்.
கோவையில் என்ஜினீயரிங் மாணவர் திடீர் சாவு
Published on

கோவை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (வயது 19).

இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com