கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 45). இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளராக தொகுப்பூதிய அடிப்படை யில் பணியாற்றி வந்தார்.

இவர் திருமலாபுரம் ஜக்கம்மாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணனுக்கு வளர்மதி என்ற மனை வியும், மது(8), நிகிதா (6), பவித்ரா (4) ஆகிய 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com