அரசு பள்ளியில் தீபாவளி விழா கொண்டாட்டம்

பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

முன்னதாக சங்க செயலாளர் ரோட்டரியன் சோமசுந்தரம் அனைவ ரையும் வரவேற்றார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ரோட்டரியன் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரியன் வாசுதே வனின் பங்களி ப்புடன் சிறப்பாக கொண்டா டப்பட்ட விழாவில் சுமார் 30 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.

இதில் ரோட்டரியன் ஏ.ஆர்.ஜான், ரோட்டரியன் தனிகாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியர் சுபாஷ், வார்டு உறுப்பினர் எழிலரசன், ஆசிரியர் வேதரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com