மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி - ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆசில் முகமது, முகமது இர்ஃபான் பதான்,ஜெபின், ராஜவேல், முருக அஷ்வந்த், அர்ஷத்,மகிமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். செல்டன் சார்லஸ், சுப்புலட்சுமி ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தீனதயாளன், கவின் ராமலிங்கம், கார்த்திகா, இஸ்ரா, ஜெனிஸ்ஷா ஆகியோர் முதலிடமும், முகமது யூசுப் 2-ம் இடமும், குகேஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீ மோகனசுந்தர், மெல்வின் செல்வ ஆண்டோ, முகமது யாசிர், நவீன், பிரவீன் குமார் ஆகியோர் முதலிடமும், கவுதம் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் செயலாளர் கஸ்தூரிபெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com