கோவில்பட்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வினியோகம்

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.
கோவில்பட்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்தபடம்.
கோவில்பட்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்தபடம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரைபாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசுகையில், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை அவரை தொடர்ந்து ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. எத்தனை நெருக்கடி வந்தாலும், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அவர்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் .கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் வரலாற்று சாதனை படைத்து நமது மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com