தருமபுரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின-மக்கள் வீடுகளில் முடக்கம்

முழு ஊரடங்கு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
முழு ஊரடங்கு காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Published on

ருமபுரி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதனால்  பிரதான சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கிராமப்புறங்களுக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

 மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன. இந்த முழு ஊரடங்கு காரண மாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். 

மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்கள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தது. வழக்கமாக காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதுமட்டுமல்லாமல் இறைச்சி விற்பனையும் படுஜோராக நடைபெறும். 

இந்த நிலையில் காணும் பொங்கல் நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் செய்வதறியாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். தர்மபுரியில் நகரை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகரின் அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் ஊரை சுற்றிய நபர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் தலா ரூ. 500 அபராதம் விதித்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com